சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-21 14:22 GMT

சேலம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட இட்டேரி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சில பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து கழிவுநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கருணாகரன், இட்டேரி, சேலம்.

மேலும் செய்திகள்