சேலம் மாநகராட்சி 56-வது வார்டு வடக்கு முனியப்பன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இங்கு குப்பைகளைஅகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
-பிரபு, சேலம்.