சேலம் மாநகராட்சி 26-வது வார்டில் ராஜகண்ணு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் முறையாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், சேலம்.