சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் காட்டூர் ஏரி உள்ளது. பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் காட்டூர் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் முழுவதும் கெட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. எனவே இங்கு சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், சேலம்.