சேலம் பெரியபுதூரில் சாக்கடை கால்வாயை பெரிதாக்கும் பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே சாக்கடை நீர் குளம்போல் தேங்குவதால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பெரிய புதூர், சேலம்.