பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-30 13:54 GMT


மயிலாடுதுறை ரெயில்நிலையம், பஸ் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலையில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழை குழியில் மூடிகள் உள்ளன. இவை அனைத்தும் சாலையின் சம அளவில் இருந்து அரை அடி பள்ளத்தில் உள் வாங்கி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்