சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-25 16:50 GMT

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 4-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து இங்குள்ள காலி மனை மற்றும் பூங்கா பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தண்ணீர் தேங்குவதால் அந்த பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அடுத்த மழைக்காலம் வருவதற்குள் சாக்கடை கால்வாய் அமைத்து மழைநீர் தேங்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

க.ஆனந்தகுமார், அண்ணாநகர், சேலம்.

மேலும் செய்திகள்