சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-09-18 16:37 GMT

சேலம் சூரமங்கலத்தில் இருந்து திருவாக்கவுண்டனூர் வழியாக கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, காட்டூர் செல்லும் சாலை உள்ளது. இந்த பாதையில் ெரயில்வே தரைப்பாலத்தின் வழியாக 24 மணி நேரமும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு நடந்து செல்லும் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு சரி செய்ய வேண்டும்

-கந்தசாமி, ஆண்டிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்