சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அப்போது மழைநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வடிகால் முறையாக அமைக்கப்படாததால் மழைநீரும், கழிவுநீரும் கலந்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே இந்த வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேவிட், தலைவாசல், சேலம்.