குண்டும், குழியுமான சாலை

Update: 2026-10-04 15:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்-பேரிகை சாலையில் நாள்தோறும் ஏராளமான 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேரிகை செல்லும் வழியில் உள்ள லிங்காபுரம் என்ற இடத்தில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்