கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலை நகரின் முக்கிய சாலை ஆகும். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தடுப்புகளுக்கு நடுவே பல இடங்களில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடைவெளி வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் மறுபுறம் செல்லும் போது விபத்தில் சிக்குகிறார்கள். எனவே தேவையில்லாத இடங்களில் உள்ள இடைவெளியை அடைத்து, பெரிய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.