கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் பாதுகாப்பு சுவர் இல்லாததால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடைமேடைக்குள் நுழைகின்றன. இதனால் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே 2-வது நடைமேடை முழுவதும் பாதுகாப்பு சுவர் அமைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.