ஈரோடு கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.