ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாலையில் நடக்கவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.