பட்டுக்கோட்டை நகர் பகுதி, பழனியப்பன் தெரு, இந்திரா நகர், அந்தோணியார் கோவில் தெரு, முத்துப்பேட்டை சாலை, அண்ணாநகர் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.