செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமெடு கிராமம் மழலையர் பள்ளி செல்லும் மண்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், சிறிய மழை பெய்தாலும் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவியர் அந்த மண்சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.