புதுச்சேரி புஸ்சி வீதி-ஆம்பூர் சாலை சந்திப்பில் பாதாள சாக்கடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. இதனால் திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.