பஸ் நிலையத்துக்குள் உலா வரும் கால்நடைகள்

Update: 2024-11-17 12:01 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் பொறையாறு பஸ் நிலையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொறையாறு பஸ் நிலையத்துக்குள் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன. கால்நடைகள் சில நேரங்களில் பயணிகளை முட்டச்செல்கின்றன. இதன்காரணமாக பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்துக்குள் உலா வரும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்