பாதியில் நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் பணி

Update: 2024-10-13 16:23 GMT


கடமலைக்குண்டுவை அடுத்த கோவில்பாறை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக குழிகளும் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் சுற்றுச்சுவருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து படுகாயமடையும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்