மதுரை மேலமாரட் வீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். குட்ஷெட் தெருவில் இருந்து பெரியார் பஸ் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப்பாதையான மேலமாரட் வீதி வழியாக இயக்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள கடைகள் அனைத்தும் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக டவுன்ஹால் ரோட்டில் இருந்து நேதாஜி ரோடு வரும் பாதையில் உள்ள பகுதிகளில் பிளாட்பாரங்களே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.