நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிக்கட்டி பொட்டல் பகுதியில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு உடையப்பன்குடியிருப்பு மெயின் ரோட்டில் இருந்து செல்லும் இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இருபுறமும் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த புதர்களில் விஷப்பூச்சிகள், பாம்புகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் உள்ள செடி,கொடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெத்தினபூபதி, மணிக்கட்டிபொட்டல்.