தேனி நகராட்சி 17-வது வார்டு பங்கஜம் தெருவில் ஜல்லிக்கற்கள், மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஜல்லிக்கற்கள், மணல் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்சு வாகனம் கூட இந்த பாதையில் செல்ல வழி இல்லாமல் உள்ளது. எனவே பாதையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள், மணல் போன்ற கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும்.