தஞ்சை-நாகை சாலையில் உள்ள சாய்பாபா கோவில் எதிரே தெருவிளக்கு உள்ளது. இந்த தெருவிளக்கு கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் தெருவிளக்கு ஒளிராமல் இருள் சூழ்ந்து இருப்பதால் மர்மநபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்கு மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?