விபத்து அபாயம்

Update: 2024-03-24 09:05 GMT

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து டி.வி.டி.காலனிக்கு செல்லும் சாலையின் திருப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் ஓடையின் பக்கச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் ஓடையின் சேதமடைந்த பக்கச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்