விபத்து அபாயம்
செட்டிகுளத்தில் இருந்து ராஜாக்கமங்கலத்துக்கு செல்லும் சாலையில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முன் சாலையில் 3 வேகத்தடைகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பஸ்சின் படிக்கட்டுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ேவார் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடையின் உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், ஆடராவிளை