இடிந்து விழும் நிலையில் ரேசன் கடை கட்டிடம்

Update: 2024-02-25 11:51 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சிவபுரம் கிராமத்தில் ரேசன் கடை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் அருகில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு ரேசன் கடை அந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் சேதமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்படாமல் இருக்கிறது. தற்போது பழைய ரேசன் கடை கட்டிடத்தின் விரிசலில் பெரிய மரம் வளர்ந்து நிற்கிறது. இதன்காரணமாக கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்