தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தேவைக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குடிநீர் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. எனவே கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.