தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர மேம்பாலம் இறக்கம் நீடாமங்கலம்-காரைக்கால் சாலை சந்திப்பு பகுதியில் குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குதிரை மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும், சாலையில் அங்கும், இங்கும் குதிரைகள் ஓடித்திரிவதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்துசெல்ல நடவடிக்கை எடுப்பார்களா?