அரசு துணை சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வருமா?

Update: 2023-11-26 10:21 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் செயல்பாடின்றி இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்