கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு இயக்கப்படும் இரவு நேர அரசு பஸ்களில் கரப்பான் பூச்சிகள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. இது தொடர்பாக துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே அரசு பஸ்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.