தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் பணி முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. குறிப்பாக மழைநீர் வடிகாலில் இருந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டியபடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?