மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-05 10:41 GMT

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கிபிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், தொட்டியில் நீர் கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்