தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சோழபுரம் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கொசுக்களின் அட்டகாசம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள, குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. கொசுக்கடியில் சிக்கி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொசுமருந்து அடித்திட நடவடிக்கை எடுப்பார்களா?