கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதனால் கட்டிடம் பழுதடைந்து வீணாகி வருகிறது. இப்படியே விட்டால், நாளடைவில் கட்டிடம் உடைந்து விழுந்து விடும். இதனால் யாருக்கும் பயன் இன்றி கிடக்கும் அந்த கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், வேறு ஏதேனும் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.