கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் அந்த சாலையோரத்தில் சில இடங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாலையோரம் தடுப்பு சுவர்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.