மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் பழங்காவேரி கூறைநாடு சாலையில் உள்ள வடபகுதி மதகு தரைமட்டமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மதகு பகுதி முறையாக இல்லாததால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மதகுகளில் இருபக்கங்களையும் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.