மூங்கில்கள் அகற்றப்படுமா?

Update: 2023-10-01 10:11 GMT

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் வழியில் 4-ம் மைல் பகுதியில் உள்ள வளைவான சாலையோரத்தில் மிகவும் சாய்ந்த நிலையில் மூங்கில்கள் மற்றும் மரங்கள் உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அங்கு சாய்ந்த நிலையில் உள்ள மூங்கில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்