ஆண்டிப்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள தேசிய வங்கியின் முன்பு கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வங்கியில் இருந்து வெளியே வருபவர்கள், அதனை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்.