வேப்பங்குப்பம் போலீஸ் நிலைய வளாகத்தைச் சுற்றிலும் தினமும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களின் கைகளில் உள்ள பைகள், ஆவணங்கள், பொருட்களை திடீரென பறித்துச் செல்வதுடன், அவர்களை அச்சுறுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து மேஜை மீதுள்ள கோப்புகள், கணினி சாதனங்கள், பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. போலீஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அடைக்கலராஜன், ஒடுகத்தூர்.