வேலூர் பெரியார் பூங்கா அருகே கோட்டை அகழி கரை உள்ளது. அந்தக் கரை கருங்கற்களால் அமைக்கப்பட்டவை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அகழிகரை கற்கள் சரிந்து விழுந்தன. ஆனால் இதுவரை அவற்றை சரி செய்யவில்லை. சிதலமடைந்த அகழி கரையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.