தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வடக்குத்தெரு, கோம்பைரோட்டில் புளியமரங்கள் உள்ள பகுதியில் குடிமகன்கள் திறந்தவெளியில் அமர்ந்து மது குடிக்கின்றனர். மது குடிப்பதோடு மட்டுமின்றி ஆபாச வார்த்தைகளை பேசி, அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், மாணவ-மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்களா