ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் காலனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழை காலங்களில் காலனி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.