தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை அங்கு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.