பயணிகள் பரிதவிப்பு

Update: 2023-09-06 17:40 GMT

தேனி பழைய பஸ்நிலையம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ்கள், பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும்போது இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பஸ்நிலைய வளாகத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்