கூடலூர் ராஜகோபாலபுரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வழியாக ஹெல்த்கேப் பகுதிக்கு நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதையில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் முட்புதர்கள் படர்ந்து காணப்படுவதால், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.