கூடலூரில் உள்ள கிளை நூலகத்தின் கட்டிடம் இடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. இதனால் வாடகை கட்டிடத்தில் குறைவான இடவசதியுடன் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.