பொதுமக்கள் அலைக்கழிப்பு

Update: 2023-09-03 11:54 GMT
கூடலூர் ஆர்டிஓ அலுவலக கட்டிடத்தில் ஆதார் திருத்த மையம் செயல்பட்டு வருகிறது. தாலுகா அளவில் உள்ள மக்கள் இங்கு தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆனால் மையத்தில் முறையாக திருத்தங்கள் மேற்கொள்ளாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் தங்களது அன்றாட பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதார மையத்தில் தொடர்ந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரன் கூடலூர்

மேலும் செய்திகள்