பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே ஆமைகுளம் பகுதி உள்ளது. இங்குள்ள சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இந்த இறைச்சி கழிவுகளை தின்பதற்கு சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருகின்றன. இதனால் வெளியே நடமாடவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.