பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் பயணிகள் நிழற்குடைக்கு அருகில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே முட்புதர்களை வெட்டி அகற்றி கழிப்பிடத்தை பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.