பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள தாளூர் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள பொது கழிப்பிடம் மூடி கிடக்கிறது. இதனால் அவர்கள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அடையும் சிரமம் சொல்லி மாளாது. எனவே அந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.